சிந்தனையாளர்களின் கருத்துகள்: ஆசிரியர் : தமிழ்ச்செல்வம் ராஜூ
சுயசரிதை
பெயர்: சிறந்த ஆசிரியர் . தமிழ்ச் செல்வம்ராஜூ
பிறந்த இடம்: லாபு, நெகிரி செம்பிலான்
பிறந்த தேதி: 25 பிப்பரவரி 1965
கல்வி: தொடக்கக்கல்வியை லாடாங் லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக்கல்வியை முகமாட் ஷயிட் நிலாயிலும் மெத்தடிஷ் சிரம்பானிலும் பயின்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு வருடம் பயின்றார். தமது இளங்கலைப் பட்டமும் முதுகலைப்பட்டமும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
தொழில்: தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக 1997-2003 வரை செவ்வனே பணியாற்றினார். 2006-2015 வரையில் இடைநிலைப்பள்ளி ஆசிரியராகவும் இன்றும் அங்குச் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2010-2014 வரை ஆரம்பப்பள்ளி நன்னெறிக்கல்வி பாடநூலின் எழுத்துத்துறையில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். அதோடு 2013-2014 உலகத் தமிழாசிரியர் மாநட்டில் கலந்து கொண்டார்.
விருதுகள்: 2011 – சிறந்த ஆசிரியர் DG44 எனும் விருது, 2015 – சிறந்த ஆசிரியரும் DG 48, தேசிய ஊனமுற்ற சிறந்த ஆசிரியர் எனும் விருது, 2016 – ரெம்பாவ் வட்டாரத்தின் சிறந்த ஆசிரியர் விருது, 2017/18 – நெகிரிசெம்பிலான் மாநிலத்தில் நல்லாசிரியர் எனும் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப் பெற்றார்.
கருத்துகள்
மாணவர்கள்
உயர்வுக்கு வழி உழைப்பும் தன்னம்பிக்கையும் என்பது எனது அனுபவப் பாடம்.
முடியாது என்று
சொல்வது மூட நம்பிக்கை
முடியுமா என்று
கேட்பது அவநம்பிக்கை
முடியும் என்று
சொல்வதே தன்னம்பிக்கை!
ஆசிரியர்கள்
ஒவ்வோர் ஆசிரியரும் தம் மாணவரின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த வேண்டும். லட்சியம் உருவாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆசிரியர் பணியைக் கடமையாகக் கருதாமல் பாக்கியமாகக் கருத வேண்டும். மாணவர்களின் நீண்ட சிக்கலான வாழ்க்கைப் பயணத்தில், அவர்களையும் ஒரு பொருட்டாக நினைத்து, நண்பர்களாக மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அரவணைக்கும்போது நான் சிறந்த ஆசிரியர் என்ற நடைபாதையில் செல்கிறேன் என்று உணர்கிறேன். “தங்களுக்குத் தாங்களே நன்னெறி வகுத்து முன்மாதிரியாக வாழும் ஆசிரியர்களே மாணவர்களுக்கு வாழ்வியலைச் சொல்லித்தர முடியும்,” என்பது எனது தாரக மந்திரம்.
பெற்றோர்கள்
பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்வி வெற்றியில் பங்கு கொள்ள அவர்களுக்கும் தமிழ்க்கல்வி அவசியம.நானும் எனக்குத் துணையாகத் தமிழ்க்கல்வியை உடன் அழைத்து வருகின்றேன். என் துறைசார்ந்த அறிவைப் புதுப்பித்துக் கொண்டே வருகிறேன்.
ஈரம் இருக்கும் வரை…
இலைகள் உதிர்வதில்லை
நம்பிக்கை இருக்கும் வரை…
நான் தோற்கப் போவதில்லை!
என்னுடைய தேடல் தொடரும்! சந்திப்போம்! மகிழ்ச்சி!
ஆலோசனைகள்:
கற்றல் கற்பித்தல்
மனமகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், அறிவுக் கூர்மை ஆகியவற்றை ஒன்றிணைத்து மாணவர்களே அவர்களின் கற்றலின் வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும் .
Leave a Reply
You must be logged in to post a comment.