சிலப்பதிகாரம் (Silappathigaram)
RM 12.50
- Description
- Additional information
Description
வளமான மொழியையும் உலகத் தரமான இலக்கிய இலக்கணங்களையும் பெற்ற பேறுடையவர்கள் நாம். சங்கம் அமைத்துப் பத்துப்பாட்டு, எட்டுக் தொகையுடன் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் தொகுத்தளித்து, தொடர்ந்து பல பெருங்காப்பியங்களையும் படைத்தருளிய பெரும் புலவர்கள் நம் முந்தையர் என்ற பெருமையும் நமக்குண்டு.
முத்தமிழையும் முழுதுறக் கற்ற வித்தகர்கள் நமக்கென விட்டுச் சென்ற செல்வங்களை நம் இளையரும் கற்றுத் தெளிந்து பயனுற வேண்டும் எனும் நோக்கில் சிலப்பதிகாரம் எனும் இந்தக் காப்பியக் கதை நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
இனிமையும் எளிமையும் பொருந்திய நடையில், இலக்கண வழுவின்றி இந்நூலை ஆசிரியர் திரு. அண்ணா கண்ணன் வழங்கியுள்ளார். மேலும், கண்ணுக்கினிய திரு.சித்திரன் அவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றோடு வாசகர்களின் புரிதலைச் சோதிக்கும் வகையில் கருத்துணர் பயிற்சிகளும் இடம்பெற்றுள்ளன.
Additional information
Weight | 79 g |
---|---|
Dimensions | 13 × 1 × 19 cm |