புதிய தமிழ் அகராதி – Puthiya Tamil Agarathi
RM 11.25
- Description
- Additional information
Description
தமிழ் சொற்செறிவும் பொருள் வளமும் நிறைந்த மொழி. இதில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. பல பொருள் உணர்த்தும் தனிச் சொற்கள் உள்ளன; நுண்பொருள் உணர்த்தும் கலைச்சொற்களும் உள்ளன. இவற்றை எல்லாம் தெளிவுற அறிந்தால்தான் தமிழ் மொழியில் புலமை பெற இயலும், இதற்குத் துணையாக இந்தப் புதிய தமிழ் அகராதி, அமையும் என நம்புகின்றோம்.
இந்த அகராதியில் பெயர்ச்சொற்களுக்கு மட்டுமல்லாமல் பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள். வேர் (மூலச்) சொற்கள். எதிர்ச்சொற்கள், ஆண் பெண்பாற் சொற்கள், சுருக்கச் சொற்கள், இணைமொழி, மரபு, உவமை, மரபுத் தொடர்கள் போன்றவற்றிற்கும் பொருள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவை தமிழ் கற்போர்க்குப் பெருந்துணை புரியும்.
இந்தப் புதிய தமிழ் அகராதி பொதுவாகத் தமிழில் தெளிவு பெற விரும்புவோர்க்கும், சிறப்பாகத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் பெருந்துணையாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
Additional information
Weight | 346 g |
---|---|
Dimensions | 13 × 2 × 19 cm |