தேர்வு நுணுக்கம் – யூ.பி.எஸ்.ஆர். கணிதம்

தேர்வு நுணுக்கம் – யூ.பி.எஸ்.ஆர். கணிதம்

 கணிதப்பாடத்தில் சிறப்புற

 1. ஆசிரியர் போதிக்கும் போது கவனமாகக் கேள். தயங்காமல் கேள்விகள் கேள்.[su_spacer size=”0″] 
 2. கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் கலந்து கொள்.[su_spacer size=”0″] 
 3. கணிதக் கருத்துரு/விபரங்களை மனத்திரையில் காட்சிப்படுத்து.[su_spacer size=”0″] 
 4. கற்றல் தொடர்பாக நண்பர்களுடன் கலந்துரையாடு.[su_spacer size=”0″] 
 5. கற்றல் திறன்கள் தொடர்பாக, சுயமாக கேள்விகளை உருவாக்கு. விடையளி. நணபர்களுடன் கலந்துரையாடு.[su_spacer size=”0″] 
 6. கற்றவற்றைச் சிந்தனை மீட்சி செய்.[su_spacer size=”0″] 
 7. போதுமான பயிற்சிகளைச் செய். பிரச்சனை உள்ள தலைப்புகளில் கூடுதல் பயிற்சி செய். குறிப்பிட்ட நேரத்திற்குள் கணக்குகளைச் செய்ய பயிற்சிகள் செய்.[su_spacer size=”0″] 
 8. உனக்குத் தெரிந்தவற்றை நண்பர்களுக்குச் சொல்லிக்கொடு. மேலும் தெளிவு பெறுவாய்.[su_spacer size=”0″] 

 தேர்வுக்கு முன் தயார்நிலை

 1. அனைத்துத் தலைப்புகளிலும் உள்ள அடிப்படை விபரங்களை/சூத்திரங்களை மனனம் செய் (வாய்பாடு, இருபரிமாண முப்பரிமாண வடிவங்களின் தன்மைகள், கோடுகள், நாணயங்கள், கோடுகளின் வகை, பல்கோணங்கள் ,…)[su_spacer size=”0″] 
 2. பின்னம், தசமம், விழுக்காடு (தொடர்பைப் புரிந்து மனனம் செய்)[su_spacer size=”0″] 
 3. நீட்டலளவை, பொருண்மை, கொள்ளவை, நேரம் ஆகியவற்றை வாசிக்கக் கற்றுக்கொள்.[su_spacer size=”0″] 
 4. சராசரி, முகடு எண், நடுவெண் வேறுபாட்டை அறி.[su_spacer size=”0″] 
 5. நேர முறைமை மாற்றம் (12 மணி முறைமை-24 மணி முறைமை)[su_spacer size=”0″] 

தாள் 1

 • விடையைச் சரியாகக் கருமையாக்கு.[su_spacer size=”0″] 
 • ஒரே கேள்விக்கு அதிக நேரத்தைச் செலவு செய்யாதே. கடினமான கேள்விகள் இருப்பின் அடுத்த கேள்விக்குச் செல்.[su_spacer size=”0″] 
 • பிரச்சனைக் கணக்குகள் – இரண்டு முறை வாசி. – முக்கிய விபரங்களைக் கோடிடு. – கேள்வியைப் புரிந்து கொள். – பொருத்தமான வழிமுறையை அடையாளம் கண்டு தீர்வு காண்.[su_spacer size=”0″] 
 • கேள்வித்தாளில் வழிமுறைகளைச் செய்யலாம், அழிக்கத் தேவையில்லை.[su_spacer size=”0″] 
 • விடையைச் சரிபார்.[su_spacer size=”0″] 

தாள் 2

 • வழி முறையையும் விடையையும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் எழுது.[su_spacer size=”0″] 
 • வரைவதற்கு அளவுகோலைப் பயன்படுத்து.[su_spacer size=”0″] 
 • விடைக்கு மறவாமல் ஏற்ற அளவுகளை எழுது.[su_spacer size=”0″] 
 • பிரச்சனைக் கணக்குகள் – கேள்விகளை மேலிருந்து முழுமையாக இரண்டு முறை வாசி – முக்கிய விபரங்களைக் கோடிடு – கேள்வியைப் புரிந்து கொள் – பொருத்தமான வழிமுறையை அடையாளம் கண்டு தீர்வு காண்.[su_spacer size=”0″] 
 • விடையைச் சரிபார்.[su_spacer size=”0″] 

திரு. முத்தரசன் செல்லையா

கணித பயிற்றியல் நிபுணர்


Share this post