உலகை ஆளப்போகும் நிரலாக்கம் (Programming)

உலகை ஆளப்போகும் நிரலாக்கம் (Programming)

மனிதன் தன் அறிவுநிலைக்கேற்ப இவ்வுலகத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறான். விவசாயம், தொழில்துறை, தொழில்நுட்பம் கடந்து, அடுத்து கட்ட வளர்ச்சியான Industry 4.0 என்ற நிலையிற்கு தற்போது மனிதர்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இதில், தற்போதிய காலமான தொழில்நுட்பக் காலம் புதிய உருவாக்கத்திற்கு வித்திட்ட காலமாகும். இக்காலத்தில்தான் Programming எனக் கூறப்படும் நிரலாக்கம் இவ்வுலக வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிரலாக்கம் என்பது மனிதன் ஒரு மென்பொருளை உருவாக்கக் கொடுக்கும் கட்டளை ஆகும். உதாரணமாக ஒரு கணினி விளையாட்டை 1000 முறை விளையாடினாலும் அவ்விளையாட்டு எப்படி உருவாக்கி இருக்கிறார்களோ அப்படி மட்டுமே விளையாட முடியும். மாறாக வேறு எதுவும் இயக்க முடியாது. மனித இயந்திரம் கூட எப்படி நிரலாக்க வடிவம் செய்யப்பட்டதோ அப்படி மட்டும் தான் இயங்கும். அதனால் தான் மனிதனை விட மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்களின் செயல்பாட்டு அளவு 99.8% மிகத் துல்லியமாக இருக்கும்.

ஆக, நிரலாக்கம் என்பது மனிதன் ஒரு மென்பொருளை வடிவமைக்க அல்லது ஒரு தொழில்நுட்பக் கருவியை இயக்க பயன்படுத்தப்படும் ஒரு கட்டளை மொழி எனக் கொள்ளலாம். இம்மொழியின் வழி மனிதன் உயிறற்ற மென்பொருள்களிடமும் கருவிகளிடமும் தொடர்பு கொள்ள முடியும். இந்த நிரலாக்க மொழியை இயற்றுபவர்களை நிரலாளர் (Programmer) என்பர். கணினி வள்ளுநர்கள் பில் கேட்ஸ் முதல் பல கோடிஸ்வரர்கள் நிரலாளர்கள்தாம். ஒரு நிரலாளர் RM 4000 முதல் RM 200,000 வரை அல்லது அதற்கும் மேல் வருமானம் ஈட்டுகின்றனர். இன்றும் திறன்மிக்க நிரலாளர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.

அடுத்த Industry 4.0 காலமானது இது போன்ற உருவாக்கத்திறன் கொண்டவர்களின் காலமாகும். உலகின் அடுத்த செல்வந்தர்கள், தொழில் முனைவர்கள், உயரிய தொழில், அதிகமான வரவேற்பு போன்றவை இந்த உருவாக்க திறன் கொண்டவர்களுக்குதான், அதில் அதிக பங்கு வகிக்கப் போகிறவர்கள் நிரலாளர்கள். இந்த Industry 4.0 காலமானது வெகு தூரத்தில் இல்லை. இப்பொழுதே நாம் அதன் நுலழவாசல் புகுந்து நடைபோட்டுக் கொண்டு இருக்கிறோம். நிரலாக்கம், வடிவமைப்பு, முப்பரிமான வடிவமைப்பு, புத்தாக்கம் இவை அனைத்தும் தலைசிறந்த விளங்கும் காலம் இது. இதில் முத்தாய்ப்பாகத் திகழ்வது நிரலாக்கம்.

  1. Code.Org :  மாணவர்கள் விளையாட்டின் வழி நிரலாக்க மொழியை எளிதாக கற்றுக் கொள்ளும் தளம்  [su_spacer size=”0″]     
  2. Code Academy :இருவழி தொடர்புடன் நிரலாக்க மொழியைக் கற்க உதவும் தளம்.[su_spacer size=”0″]     
  3. Code Combat : மாணவர்கள் கணினி விளையாட்டின் வழி நிரலாக்க மொழியை கற்றுக் கொள்ளும் தளம். கூடுதலாக சிரியர்களுக்கான பாட முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. [su_spacer size=”0″] 

ஆகவே, மாணவர்கள் இந்நிரலாக்க மொழியின் தேவையை உணர்ந்து இப்பொழுதே நிரலாக்கத்தில் ஈடுபடுவது சாலச் சிறந்தது, ஏனெனில் நிரலாக்கம் எதிர்காலத்தையும் ஆட்கொள்ளும் வல்லமை கொண்டுள்ளது.நிரலாகத்தைக் கற்போம்; புத்தாக்கத்தை உருவாக்குவோம் .

ஆ.கரு


Share this post