-35%

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்  (மருத்துவக் கேள்வி – பதில்கள்)

RM 13.00

Description

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்  (மருத்துவக் கேள்வி – பதில்கள்)

டாக்டர் மா. சண்முக சிவாவின்

(மருத்துவர் கேள்வி- பதில்கள் எண்ணற்றோர் கேட்டு, நிறைய மருத்துவர்கள் பதில்சொல்லி நாம் படித்திருக்கிறோம். அவைகளில் இருந்து சண்முக சிவா எங்கு மாறுபடுகிறார்? இது முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது. சண்முக சிவா முதலில் கேள்வியை நன்றாக உள்வாங்கிக் கொள்கிறார். அதன்பிறகு, நோயை உணர்பவர் (நோயாளிகள் அல்ல) கொடுத்திருக்கும் குறைந்த தகவல்களைக்கொண்டு. நோயை அலசுகிறார். நோய் தோன்றும் காரணிகளை ஆராய்கிறார். நோயின் பிரச்சனைக்கு இசைவாகத் தான் படித்த கவிதைகள் மற்றும் கவிமனோபாவத்திலிருந்து பல எடுத்துக்காட்டுகளைத் தந்து, கவிதைகளையும் மருந்தாக மாற்றியமைக்கிறார். கவிதை மருந்தாகுமா என்ன? ஆகும். மனதுக்கு ஆரோக்கியம் தருவது கவிதை, இலக்கியம் என்பது உண்மையானால், ஆரோக்கியம் மருந்தாகாமல் வேறு எதுவாக முடியும்? உண்மையில் மனமது செம்மை யானால் உடலும் உயிரும் செம்மையாகும். எல்லோருக்கும் பொது அல்லாத மருந்து பதில்களுடன், எல்லோருக்கும் அவசியமான கவிதைகளைத் தந்து, இந்தக் கேள்வி பதில்களை எல்லோரும் படிக்கத் தக்க நூலாக்கி இருக்கிறார். மருந்து தேவையானவர்களுக்கு கவிதை போனசாகிறது. கவிதை ரசிகர்க்கு மருந்து இலவசமாகிறது.

Additional information

Weight 308 g
Book Author

Dr.M.Shanmugasiva

Reviews

There are no reviews yet.


Be the first to review “மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்  (மருத்துவக் கேள்வி – பதில்கள்)”